தின காற்று நாளிதழ்செய்தி எதிரொளி......

தின காற்று நாளிதழ்செய்தி எதிரொளி......

தேனி மாவட்டம் நாட்டுப்புற கலைஞர்கள் கோரிக்கை என்ற தலைப்பில் தேவதானப்பட்டியில் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் வறுமையில் வாடுவதாகவும் இவர்கள் 144 தடை உத்தரவால் வேலை இழந்து கஷ்டப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு சமூக ஆர்வலர்கள் உதவிட வேண்டும் என்று நேற்று நமது தின காற்றுநாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தோம் அந்த செய்தியை  சமூக வளைதளத்தில் பதிவு செய்து இருந்ததை அறிந்த பெரியகுளம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து தினமும் சூறாவளியாய் சுழன்று அரிசி பருப்பு காய்கறி என பல      ஆயிரம் நபர்களுக்கு உதவி செய்து வரும் நபர்கள் விபரம் அறிந்து
 இன்று (03/05/2020) தேவதானப்பட்டி பகுதியில் உள்ள நாட்டுப்புற இசை கலைஞர்களுக்கு பெரியகுளம் ஷாஹின் பாக் இஸ்லாமிய இளை ஞர்கள் சார்பாக 30 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்கள்.இதுவே தேவதானப்பட்டி  பகுதியில் முதன் முதலாக வழங்க பட்ட சேவை என்பதால்  தேவதானப்பட்டி நாட்டுப்புற கலைஞர்கள் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இவர்களை பெரிதும் பாராட்டிவருகின்றன .