காட்டுமன்னார்கோவில் பொதுமக்களுக்குகபசுர குடிநீர் வழங்கல்



காட்டுமன்னார்கோவில்
மே-30

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே விநாயகர் பேரரசர் அறக்கட்டளை  சார்பாக ஐந்தாவது முறையாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் விநாயகர் பேரரசர்கள் அறக்கட்டளை இயக்குனர் கனகராஜ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவாசகம்  ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் அலுவலக கணக்கர் மான்சி ஆகியோர் கலந்துக்கொண்டனர்