திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.சி.வீரமணி
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு உத்தரவு மற்றும் தமிழக அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான 60 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு நடமாடும் சிறப்பு மருத்துவ முகாம் மூலம் 30ஆயிரம் நபர்களுக்கு வீடு தேடி சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 32 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 28 நபர்கள் முழுமையாக குணமடைந்து 4 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி அளித்தார்.
Comments
Post a Comment