சலவை தொழிலாளிகளுக்கு நிவாரணம்.....


தேனி மாவட்டம் க . புதுப்பட்டி பேரூராட்சியில் சலவை, மற்றும் சவரத் தொழிலாளிகள் 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இடைக்கால நிவாரணத்தை எம்.எல்.ஏ எஸ்.டி.கே ஜக்கையன் வழங்கினார்


தேனி மாவட்டத்தில் க.புதுப்பட்டி பேரூராட்சியில் கொரோனா இடைக்கால தடையால் வாழ்வாதாரம் இழந்து பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட பின் தங்கிய சலவைத் தொழிலாளிகள் மற்றும் சவரத் தொழிலாளிகள் 100க்கும் மேற்பட்டோருக்கு அரிசி மற்றும் மளிகை சாமான் அடங்கிய தொகுப்பினை அதிமுக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன் வழங்கினார் உடன் கம்பம் ஒன்றியச் செயலாளார் இளைய நம்பி பேருர் கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி புதுப் பட்டி கூட்டுறவு வேளாண்மை தலைவர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் சுரேஷ்குமார் ஆசிரியர் சுப்பிரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

  இவன் ரா.அழகர்சாமி நிருபர் தேனி மாவட்டம்

Comments