வட மாநிலங்களில் வேளாண் பயிர்களை தாக்கி வரும் வெட்டுக்கிளிகள், தமிழகத்திலும் பரவக்கூடும் என, இந்திய வேளாண் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், 'வெட்டுக்கிளிகள் எச்சரிக்கை அமைப்பு' தெரிவித்துள்ளது.இதுகுறித்து, கோவை மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் சித்ராதேவி வெளிட்டுள்ள அறிக்கை:ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள விளைநிலங்களில் உள்ள பயிர்களை கூட்டமாக தாக்கி வரும் வெட்டுக்கிளிகள், தமிழக பயிர்களையும் தாக்க கூடும்.இதனால், கோவை மாவட்ட அனைத்து வட்டார அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள், கேரள எல்லையை ஓட்டி உள்ள ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை வட்டாரங்களில் வெட்டுக்கிளி ஊடுருவல் மற்றும் அதன் நடமாட்டத்தை கண்காணிக்க, கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுடன் சேர்ந்து, கேரள எல்லையை ஓட்டியுள்ள கூடலுார் தாலுகாவில், வெட்டுக்கிளிகள் நடமாட்டம் குறித்த, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.வெட்டுக்கிளிகளின் தாக்குதலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான மேலாண்மை முறைகளை கையாள்வது மூலம், இதன் பரவலை தடுக்கலாம். விவசாயிகள் தங்களது தோட்டத்தில், வெட்டுக்கிளிகளின் தாக்குதல் அறிகுறிகள் இருந்தால், அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்துக்கு, உடனடியாக தெரியப்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Comments
Post a Comment