கொடைக்கானலில் மருத்துவத்துறையினரை கெளரவாக்கும் நிகழ்ச்சி


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உலகையே அச்சுறுத்தி வருகிறது கொரானா வைரஸ்  இந்த வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் இந்தியாவில் மத்திய,மாநில அரசுகள் பல்வேறு"நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன இதற்கு"மருத்துவத்துறை,சுகாதாரத்துறை,நகராட்சி நிர்வாகம், காவல்துறை ஆகிய துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவர்களை பாராட்டும் வகையில் கொடைக்கானல் தோட்டக்கலைத் துறையின் சார்பில் ஏற்கனவே சுகாதாரத்துறையினரை பாராட்டி கெளரவித்து பிரையண்ட் பூங்காவை பார்ப்பதற்கு இலவசமாக அனுமதி வழங்கப்பட்டது.

இந் நிலையில் இன்று கொடைக்கானல் அரசு மருத்துவ மனையில் பணியாற்றும்"மருத்துவரக்கள்,செவிலியரக்ள்,அலுவலக பணியாளர்கள்உள்ளிடவரை"அழைத்து பிரையண்ட் பூங்காவில் அவர்களை"கெளரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.. 

இந் நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணைஇயக்குனர் சீனிவாசன் மருத்தவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மலர்கொத்து வழங்கி கெளரவித்தனர். மேலும் அவர்களை"பிரையண்ட் பூங்காவில் பூத்துள்ள லட்சக்கணக்காண மலர்களை பார்வையிடுவதற்கும் அனுமதி வழங்கி அனைவருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சியில் 60−க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

Comments