இன்று 29/05/2020
வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக
வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள்
சங்கத்தின் தலைவர் தயா.பேரின்பம் தலைமையில்
நூதன முறையில்
திட்டக்குடி வட்டாட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
உடன்
சங்கத்தின் நிர்வாகிகள்
கோ.பாண்டுரங்கன் (பொருளாளர்)
சி.பழனிச்சாமி
(துணைச் செயலாளர்)
சங்கத்தின் கிளை நிர்வாகிகள்
நாவலூர் முருகானந்தம் , சிறுமுளை வீரராஜன் , கணேசமூர்த்தி , பழனிச்சாமி, எழுமாத்தூர் செல்வராசு , கோழியூர் பாண்டியன் , ஆகியோர் உடன் இருந்தனர்.
கோரிக்கைகள்:-
கொரோனா வைரஸ் கிருமியால் தமிழ்நாடு ஊரடங்கில் உள்ள நிலையில்
விவசாயிகள்
விவசாயக் கூலி தொழிலாளர்கள்
தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உயிர் வாழ்வதற்கே சித்திரவதைப் பட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில்
தமிழக விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் நோக்கத்தில் விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடத்தாமல்
விவசாயிகள் நீண்ட ஆண்டுகளாக போராடி பெற்ற
காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜன் ஜலால் திட்டத்தில் இணைத்து தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்தது மட்டுமல்லாமல்
இப்போது
விவசாயிகளுக்கு வழங்கிவந்த இலவச மின்சாரத்தை ரத்து செய்துள்ளது மத்திய அரசு.
இந்த மத்திய அரசு தனிச்சையாக அதிகாரத்தோடு விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இது விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே
இந்த மத்திய அரசு விவசாயத்தை ஊனம் ஆக்குவதாகவும் , கருத்துரிமையை பறிக்கபடுவதாகவும் இந்தப் பகுதியில் இருக்கும் விவசாயிகள் தெரிவிப்பதாக
தாங்கள்
தமிழக முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கும் , மாவட்ட ஆட்சியர் அவர்களின் பார்வைக்கும் கொண்டு செல்லுமாறு
தலை , கை , கால்களில் கட்டுப்போட்டுக் கொண்டு வாயில் கருப்பு துணியால் மூடிக்கொண்டு
மத்திய அரசு
விவசாயத்தை ஊனம் ஆக்குவதாகவும்.
கருத்துரிமையை பறிப்பதையும்
உணர்த்தும் வகையில்
நூதன முறையில்
திட்டக்குடி வட்டாட்சியர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
Comments
Post a Comment