தேவதானப்பட்டி பேரூராட்சி சுகாதார பணியாளர்கள்

தேவதானப்பட்டி பேரூராட்சி சுகாதார பணியாளர்கள்  மற்றும் நிர்வாகத்தினர் உறங்குகிறார்களா  என பொதுமக்கள் குற்றசாட்டு .....
   
    தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் தங்களது வேலையை சரிவர பார்ப்பதில்லை எனவும் இதனை அந்த நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விடுவதாகவும் மீறி யாரேனும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு சுகாதாரம் சார்பாக பேரூராட்சி க்கு தகவல் கொடுத்தல் தகவல் உண்மை என்ன என்று ஆராய்ந்து அதற்கான தீர்வை காணாமல் புகார் கூறும் சமூக ஆர்வலர்களை  அவருக்கு வேண்டாத ஒருவருடன் இணைத்து கூறி நாங்கள் சொல்லவில்லை அவர் தான் சொன்னார் இவர் தான் சொன்னார் என்று சமூக ஆர்வலர்கள் மீது பேரூராட்சி நிர்வாகம் வம்புழுத்து விடுகிறது இதையும் மீறி தெரியப்படுத்தினால் அதனை கடைமைக்கு வேலை செய்வது போல் செய்கின்றன என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றன .அதுமட்டுமின்றி தேவதானப்பட்டி அரிசிக்கடை முதல் புள்ளக்காப்பட்டி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரம்   சாக்கடை சீரமைப்பு பணியினை தேசிய நெடுஞ்சாலை துறையினர் சீர்  செய்தனர்.அதில் தோண்டப்பட்ட மண்ணை சாலையின் மறுபுறம் கொட்டிவிட்டதால்  அந்த பகுதி மக்கள் சாலையின் ஓரமே மலம் கழிப்பதாக தெரிவிக்கின்றன .இந்த சாலை முக்கிய சாலை என்பதால் அந்த பகுதியில் துறுநாற்றம் அதிகமாக அடிப்பதாகவும் இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இதனை தேவதானப்பட்டி பேரூராட்சி சுகாதார பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் கண்டு காணாமல் தினந்தோறும்  மூச்சை பிடித்து கொண்டு சென்று வருகின்றன .இதுபோன்று தேவதானப்பட்டியில் பேரூராட்சி பகுதியில்  பல்வேறு பணிகள் மற்றும் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறிவருகின்றன.பேரூராட்சி நிர்வாகத்தில் சுகாதார பணியாளர்கள் மொத்தம் 50 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்க்கின்றன எனவும்   தேவதானப்பட்டி பேரூராட்சியில் ஒப்பந்த  பணியாளர்களை   தவிர மற்ற நிரந்தரப் பணியாளர்கள் அவரவர்  வேலைகளை செய்வதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதேபோன்று கெங்குவார்பட்டி பேரூராட்சியில் இதே நிலை தொடர்பாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்    அரசு நிர்ணயித்த வேலையை விட்டுட்டு அவர்கள்  அலுவலக பணிகள் மட்டுமே செய்கின்றன எனவும் அரசு நிர்ணயித்த வேலையை செய்யவில்லை எனவும் கூறிவருகின்றன . இதனை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்து தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றன.இவர்கள் மீது நடவடிக்கை பாயுமா என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு ..

இவன் ரா.அழகர்சாமி தேனி மாவட்டம்