பொதுமக்கள் சார்பில் திமுக கொடுத்த மனுக்கள் குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடுவதை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தவிற்க்கவேண்டும்: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் 10 ஆயிரம் மனுக்களை அளித்தபின் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு பேட்டி
செங்கல்பட்டு:மே-31. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரொனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், நோய் தொற்று தொடர்பாக உடனுக்குடன் தகவல்களை பெற வழிவகை செய்மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸிடம் திமுக சார்பில் 20 கோரிக்கைகளை வலியுறுத்தி 10 ஆயிரம் மனுக்களை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு தலைமையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திமுக தொகுதி காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர், ராஜா. பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, செங்கல் சட்டமன்றஉறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன். சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்நெல்லிக்குப்பம் புகழேந்தி. செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.அரசு.திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன், ஆகியோர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.ஆர் பாலு, திமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 1 லட்சம் மனுக்களை தலைமைச் செயலாளரை சந்தித்து மனுக்களை அளித்தோம். இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறிய கருத்து உண்மைக்கு புறம்பானது என்றும், அந்த மனுக்கள் பொதுமக்களால் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் திமுக சேகரித்து அரசிடம் அளித்ததாகும் அதனை படிக்காமலேயே ஆளும் அரசு சார்பில் கருத்துக்களை தெரிவிக்கும் அமைச்சர்கள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தவராக வெளியிடவேண்டாம் எனவும், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்க்கும் அரசு அந்தந்த மாவட்ட நிவாகத்தின் மூலமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சிவப்பு மண்டல மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான தேதி வாரியான தரவுகளை வழங்கிடவேண்டும். செங்கல்பட்டு மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் கொரொனா வைரஸ் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டன, எந்தெந்த பகுதிகளில் கட்டுபாடுகளை விளக்கிக்கொள்ளப்பட்டன என்ற விவரங்களை அறியாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர் எனவே இது தொடர்பான அனைத்து தகவல்களையும் துள்ளியமாக வழங்கிடவேண்டும்.
செங்கல்பட்டு மாவட்ட மருத்துவமனையில் கொரொனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கொள்ளப்பட்ட சோதனை குறித்த தேதி வாரியான விவரங்களையும், கொரொனா பாதிப்பிலிருந்து நோயாளிகள் குணமடைந்து விட்டதாக எவ்வாறு உறுதிபடுத்தப்பட்டது. என்பன 20 கோரிக்கைகள் அடங்கிய 10 ஆயிரம் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்ததாக அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து ஆப்பூர்,சந்தானம் காட்டாங்கொளத்தூர் திமுக ஒன்றிய செயலாளர் முனிராஜ் ஒன்றிய துணைச் செயலாளர் அருள் தேவி செங்கல்பட்டு நகர செயலாளர்.நரேந்திரன் மற்றும் திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment