31-05-2020
கொடைக்கானல்
கொடைக்கானலுக்கு வெளி மாநிலங்களில் இருந்து வந்து தங்கி
வேலைபார்த்து வந்த ஒரு பெண் ஒரு குழந்தை உட்பட 41 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு இன்று சிறப்பு பேருந்து மூலம் அனுப்பிவைக்கபட்டனர்...
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வெளிமாநிலங்களில் இருந்து சுமார் 450க்கும் மேற்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி தங்கும் விடுதிகள் மற்றும் கட்டுமானபணிகளுக்காக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக இரண்டு மாதமாக வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன் படி இன்று உத்திரபிரதேச மாநிலத்திற்க்கு ஒரு பெண் ஒரு குழந்தை உட்பட 41 பேரை பேருந்துநிலையத்தில் இருந்து இன்று கோட்டாசியர் , காவல்துணை கண்காணிப்பாளர் ,வட்டாசியர் முன்னிலையில் தனி வாகனம் மூலம் திண்டுக்கல் ரயில் நிலையத்திற்க்கு அனுப்பட்டனர்...மேலும் அனைவருக்கும் முககவசம், தண்ணீர் பாட்டில்கள், காலை உணவு ஆகியவற்றை கொடுத்து அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.
கொடைக்கானல் செய்தியாளர் மா பாண்டியன்
Comments
Post a Comment