29.05.2020
கொடைக்கானல்
கொடைக்கானலில் நகர தேமுதிக சார்பாக தொடர்ந்து மூன்றாவது நாளாக 1500க்குக் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது .
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரோனா எதிரொலியால் ஊரடங்கு உத்தரவு உள்ள நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என கேப்டனின் ஆணைப்படி `கழக பொருளாளர் அண்ணியார் வழிகாட்டுதல்படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் தேமுதிக நகர செயலாளர் செந்தில்குமார் இன்று 800க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார் . மேலும் தொடர்ந்து மூன்று நாட்களாக இதுவரை மொத்தம் 1500 ஏழை எளிய மக்களுக்கு கொடைக்கானல் நகர தேமுதிக சார்பாக நிவரானபொருட்கள் வழங்கப்பட்டது . மேலும் தொடர்ந்து ஊரடங்கு உள்ள நாட்களில் கொடைக்கானலில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வாடும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட இருப்பதாகவும் நகர செயலாளர் செந்தில்குமார் தெரிவித்தார் . அரசு விதித்துள்ள முறைபடி அனைவரும் மூன்று அடி சமூக இடைவெளிவிட்டும், முககவசம் அணிந்தும் நிவாரணப்பொருட்களை பெற்று சென்றனர். இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் நகர நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment