வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளி 50 மாணவர்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் நீலோபர் கபீல் வழங்கினார்.
வாணியம்பாடி மே 29 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி அலுவலகத்தில் தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 50 பேருக்கு அரிசி ,மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட முக கவசம் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம், நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) பாபு, அதிமுக நகர செயலாளர் சதாசிவம் உட்பட பலர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment