கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி பகுதியில்கடந்த 28.5.2020

தமிழக அரசுக்கு
கோரிக்கை

கொடைக்கானல் வட்டம் தாண்டிக்குடி பகுதியில் கடந்த 28.5.2020
அன்று இரவு முதல் டிரான்ஸ்பார்மர்  கூடுதல் பழு காரணமாகவும்
இடி   மின்னல காரணமாகவும்
புகைந்ததால் 3 நாட்களாக மின்சாரம் வசதி இல்லாமல் பொதுமக்கள் இருளில் மூழ்கி இருந்தனர்

அதன் பின்பண்ணைக் காடு AD அவர்கள் 
மற்றும் மின் துறை ஊழியர்கள்
வேலை செய்தனர்

இந்நிலையில் இன்று 30.5.2020
மதியம் சுமார் 12 .00 மணி அளவில்
ஒரு பகுதிக்கு மின்சாரம்
வந்துள்ளது

எனவே மின்சாரம்
 வழங்கிய ஊழியர்கள் அனைவருக்கும் நன்றியை
தெரிவித்துக் கொள்கிறோம்

மேலும்
எங்கள் பகுதிக்கு AD அலுவலகத்திற்கு என்று தனியாக ஜீப் வசதி இல்லாத காரணத்தால்
ஊழியர்கள் வேலை செய்ய கால தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் தான் இருளில் தவிக்கிறோம்
ஆகையால்
70 km சுற்றளவுள்ள 
மலைப் பகுதியில் பண்ணைக்காடு 
AD அலுவலகத்திற்கு  அரசு உடனே ஜீப் வசதி செய்து தர வேண்டும்

அதே போல்
தாண்டிக்குடியில் ஊருக்கு மேல் பகுதியில் புதிய
டிரான்ஸ்பார்மர் 
அமைத்து அடிக்கடி
மின்தடை ஏற்பாடமல் அரசு உரிய 
நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம்
இவன்
பாரதிய கிசான் சங்கம்
செய்தியாளர். மா பாண்டியன் 
கொடைக்கானல்

Comments