செங்கல்பட்டில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை.

செங்கல்பட்டில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 25 சவரன் நகைகள் கொள்ளை. காவல்துறையினர் விசாரணை

செங்கல்பட்டு அருகே ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து, 25,சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை  காவல்துறையினர் தேடி வருகின்றனர் 

செங்கல்பட்டுமாவட்டம் செங்கல்பட்டு அடுத்த திருப்போரூர்கூட்டு சாலை அருகேசாந்தி நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரான பாலகிருஷ்ணன் வயது 67 இவருக்கு கஸ்தூரி வயது 58   ஆகியோர் தனது குடும்பத்தோடு, கடந்த இரு தினங்ககுக்கு முன் செங்கல்பட்டு அடுத்த மேலமையூரில் உள்ள தன் மகன் வீட்டிற்கு பேரக்குழந்தையின் பிறந்தநாள் கொடாட்டத்தை காண சென்றுள்ளார். 

இன்று காலை மீண்டும் தனது வீடு திரும்பிய கஸ்தூரி பாலகிருஷ்ணன், தனது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர், இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, கஸ்தூரி பாலகிருஷ்ணன் செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களுடன் சென்ற காவல்துறையினர், தடயங்களை சேகரித்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் காந்தன் தாலுகா காவல் ஆய்வாளர் ஜெயராமன் பார்வையிட்டார் மற்றும் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

Comments