சாத்தான்குளம் பகுதியில் சுமார் 1.5 கோடி மதிப்பில் குளங்களை தூர்வாரும் பணி தொடக்கம்.
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன் தொடங்கி வைத்தார்.
குடிமராமத்து திட்டம் 2020-2021ன் கீழ் குளங்களை தூர்வாரும் பணி தூத்துக்குடி மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சாத்தான்குளம் தாலுகாவிலுள்ள கோமநேரிகுளம், நெடுங்குளம் மற்றும் ஆழ்வை ஒன்றியத்துக்குட்பட்ட சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள புளியங்குளம் ஆகியவற்றை தூர்வாரும் பணி இன்று தொடங்கப்பட்டது. இதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி சண்முகநாதன் அவர்கள் கலந்துகொண்டு கொடியசைத்து இந்த பணிகளை துவக்கி வைத்தார். இதில் சாத்தான்குளம் ஒன்றிய செயலாளர் அச்சம்பாடு சவுந்தரபாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்தத் திட்டத்தின் கீழ் குளங்களை தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துவது, ஷட்டர்களை சரி செய்வது புதிய ஷட்டர்கள் அமைப்பது மற்றும் தண்ணீர் செல்லக்கூடிய வாய்க்கால்கள் சரிசெய்வது போன்றவை இத்திட்டத்தின்கீழ் சீர் செய்யப்படும். இதனால் மழைக்காலங்களில் போதுமான அளவு மழை நீர் தேக்கப்பட்டு விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு பயனுள்ளதாக மாறும் அரசின் இந்த பணிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்
Comments
Post a Comment