தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு!

தருமபுரி மாவட்ட இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு
      தருமபுரி, ஏப். 04-
தருமபுரி மாவட்ட  இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு கூட்டம் நல்லம்பள்ளி வட்டம் இலளிகம் தியாகி ஆர். பச்சாகவுண்டர் நினைவு படிப்பகத்தில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் எல்.சி.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. 
        இதில் கட்சியின் மாநிலத் தலைவர் ப.கி.பட்டாபிராமன் கலந்துக் கொண்டு 2026 - ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து திமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் என்று கூறினார்.
        இக்கூட்டத்தில் கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஜெ.பிரதாபன் 
தருமபுரி மாவட்டத்தில் திமுக கூட்டணிக்கட்சிகளின் வேட்பாளர்களான 
தருமபுரி தே.மு.தி.க வேட்பாளர் டாக்டர் இளங்கோவன் முரசு சின்னத்திலும், பாப்பிரெட்டிபட்டி தொகுதி திமுக வேட்பாளர்
முன்னாள் அமைச்சர்
பி. பழனியப்பன், 
பாலக்கோடு சட்ட மன்ற தொகுதி திமுக வேட்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டிஎன்வி செந்தில்குமார்,
அரூர்(தனி) தொகுதி திமுக வேட்பாளர் அ.சண்முகம் ஆகியோருக்கு உதய சூரியன் சின்னத்திலும்,
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தமிழ் குமரன் கை சின்னத்திலும் வாக்கு கேட்டு தீவிர பிரசாரத்தில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் என்று பேசினார்.
          இந்த கூட்டத்தில் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஜி. மாதையன், மாவட்ட பொருளாளர்  ஈ .அலமேலு, மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பி. இரவி, ஜி.பச்சாகவுண்டர், ஜி.ராஜகோபால், எம். குமார், வி. செல்வம் , என்.பி. ராஜி, ஜி. சம்பத்  மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம். முண்ணு, கே. ராஜமாணிக்கம், ஆர். மல்லையன், வி. அர்ஜுணன், ஜி. காளியம்மாள், கே.சி. மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.