லக்னோவில் விஐடி முன்னாள் மாணவர்கள் சங்க கிளை தொடக்கம்!
லக்னோ: ஏப்ரல் 2026-
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விஐடி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சங்க கிளை தொடங்கப்பட்டது.
விஐடி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் முன்னாள் மாணவர் சங்க கிளைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், 22-வது கிளையாக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விஐடி முன்னாள் மாணவர் சங்க கிளை நேற்று தொடங்கப்பட்டது.
வி.ஐ.டி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற முன்னாள் மாணவர் சங்க கிளை தொடக்க நிகழ்வில், உத்தரபிரதேச மாநிலத்தின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் அனில் ராஜ்பர், பாஜக எம்எல்ஏ நீரஜ் போரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி எம்.கே.சண்முகசுந்தரம், ஐபிஎஸ் அதிகாரி ஜி.கே.கோஷ்வாமி, இந்திய வனப்பணி அதிகாரி எச்.ராஜா மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் விஐடி துணை தலைவர் சங்கர் விசுவநாதன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், விஐடி முன்னாள் மாணவர் சங்கத்தின் இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் உத்தரபிரதேச மாநில முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து, விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கூறும்போது,
“விஐடி பல்லைக்கழகத்தின் 4 வளாகங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதுவரை உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 7,000 மாணவர்கள் படித்து பட்டங்களை பெற்றுள்ளனர். தற்போது விஐடியின் நான்கு வளாகங்களில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 3,000 மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்தவகையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் விஐடி முன்னாள் மாணவர் சங்கத்தின் முதல் கிளை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 22 கிளைகள் உள்ளன. அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் 41 கிளைகள் உள்ளன. உள்நாடு, வெளிநாடுகளில் மொத்தம் 63 முன்னாள் மாணவர் சங்க கிளைகள் உள்ளன” என்றார்.