பா.ம.க கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் செயற்குழு மற்றும் ஆலோசனை கூட்டம்!

காடாம்புலியூரில் பா.ம.க கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் தலைமையில் செயற்குழு மற்றும் ஆலோசனை கூட்டம்!
பண்ருட்டி, ஏப்.27-
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வேண்டி தமிழக முதல்வர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருக்கும் கடிதம் அனுப்பும் விண்ணப்பத்தை வழங்கி வருகின்றனர். 
          அதன் ஒரு பகுதியாக பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் தனியார் திருமண மண்டபத்தில் பாமக கடலூர் வடக்கு மாவட்டசெயலாளர் ஜெகன் தலைமையில், செயற்குழு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகளுக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அதனைத் தொடர்ந்து நிர்வாகிகளுக்கு படிவம் வழங்கப்பட்டது.
         கடந்த கால ஆட்சியில் கொண்டு வரப்பட்டு வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ, மாணவிகளின் நலன் கருதி மீண்டும்  10.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தும் விதமாக ஒவ்வொரு வன்னியரும் தமிழக முதல்வருக்கும் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையருக்கும் நேரடியாக கடிதம் எழுத வேண்டி விண்ணப்பம் வழங்கப்பட்டது.
          இதனை அந்தந்த பகுதி நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் பூர்த்தி செய்து அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டது. கடலூர் வடக்கு மாவட்டம் சார்பாக 1.50 லட்சம் தபால்கள் அனுப்புவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான கட்சி நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.

Comments